Fri. May 17th, 2024

ஆலங்கட்டை இந்து மயானத்தில் சமாதிகள் விசமிகளால் உடைப்பு

வடமராட்சி பகுதியில் உள்ள பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில்  ஆலங்கட்டை இந்து மயானத்தில் அமைக்கப்பட்ட இரு நினைவுச் சமாதிகள் சில விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நினைவுச் சமாதியின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படும் நினைவுச் சமாதியே இவ்வாறு  உடைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஒரு கிறிஸ்தவ முறைப்படி ஒருவரின் சமாதி உள்ள இடத்தில் வேறொருவரை புதைக்க மாட்டார்கள். இவ்வாறு இருக்கும் போது இறந்தவர்களின் ஆத்மா துயிலும் இடத்தை அழிப்பதென்பது தவறான செயலாகும்.

இது தொடர்பாக ஆலங்கட்டை இந்து மயானத் தலைவரிடம் கேட்ட போது, அண்மையில் சமாதி ஒனறு அனுமதி தருமாறு கேட்கப்பட்டது. மயானத்தில் கட்டடம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கும் பொறுப்பு பிரதேச சபைக்கே உரித்தானது ஆகையால் கரவெட்டி பிரதேச சபைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தேன். அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் குறித்த இந்து மயானத்திற்கு உறவினர் ஒருவரின்  கிரிகை செய்வதற்காக சென்று சில இடங்களையும் பார்வையிட்டேன். அங்கு புதிதாக எந்த சமாதியும் அமைக்கப்பட்டதற்கான அடையாளம் எதனையும் நான் காணவில்லை என்றார்.
இது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களிடம் கேட்ட போது,
எம்மிடம் சமாதி கட்டுவதற்கான அனுமதி பெறப்படவில்லை. இடப்பிரச்சனை காரணமாக சமாதி கட்டுவதற்கான அனுமதியும் நீண்ட ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. தற்போது அமைக்கப்பட்டது தொடர்பாகவும், உடைக்கப்பட்டது தொடர்பாகவும் எவராலும் முறைப்பாடு தரப்படவில்லை. முறைப்பாடு தெரிவிக்குமிடத்து இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்