Fri. May 17th, 2024

ஆரம்பபிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வார்த்தை பிரயோகங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கதின் தலைவர் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டு   

ஆரம்பபிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது வார்த்தைகளை நாகரீகமாக பிரயோகிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில் சிறுவர்கள் மத்தியில் நல்லதோ கெட்டதோ பசுமரத்து ஆணிபோல பதிந்துவிடும். அதுமட்டுமல்ல தனது ஆசிரியர் பிரயோகிக்கும் வார்த்தை உன்னதமானது என உள்வாங்கி கொள்வதுடன் வீட்டிலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்துகின்றார்கள். இதனால் வீட்டில் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. பிள்ளை ஆசிரியர் பிரயோகிக்கும் வார்த்தையே உயர்ந்தது எனக்கருதுகின்றது. எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். தண்டனை வழங்க கூடாது என்பதற்காக வார்த்தைகளை கடுமையாக பயன்படுத்துகிறார்கள். “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு” என்பதற்கு அமைய பிள்ளைகள் உளரீதியாக பாதிப்புக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனமடைவதுடன் அதிபரிடம் தெரியப்படுத்த பிள்ளைகள் விரும்பவில்லை, பயம் கொள்கிறார்கள் என வேதனையடைகின்றனர். வீட்டிலே பயன்படுத்தாத வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றது. எனக்கேட்ட போதே வகுப்பாசிரியர் வகுப்பில் பேசுகிறார். அதனைத் தான் பேசுகிறேன் என உயர்ந்த குரலில் சொல்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் சினம்வரினும் பொறுமையுடன் அன்பான பண்பான நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும். இல்லையேல் பிள்ளைகளின் நாகரீகமற்ற செயல்பாட்டுக்கு ஆசிரியர்களே காரணமாகிவிடக்கூடாது. குழந்தைகளின் வார்த்தையை  உயர்ந்ததாக்க ஆசிரியர்கள் சிறப்பு தேர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும். நல்லதை கூறுவதும் நாங்ளாக இருக்கட்டும் நல்லதை செயல்படுத்துவதும் நாங்ளாக இருக்கட்டும். அப்பொழுதுதான் அடுத்த தலைமுறை சிறப்பாக எழுச்சியுறும் ஏனெனில் சரியான விதைப்பே நல்ல அறுவடையை தரும் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் உங்கள் பிள்ளைகள் போல கருதி செயல்படுங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்