Sat. May 18th, 2024

அரை சொகுசு பேருந்துகளின் ஆயுட்காலம் 2020 ஜனவாி மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது.

2020ம் ஆண்டு ஜனவாி மாதம் தொடக்கம் அரை சொகுசு பேருந்துகள் முற்றாக தடை செய்யப்படும் என பயணி கள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரைச் சொகுசு பேருந்துகளின் சேவையினால் பயணிகளுக்கு எந்தவித வசதிகளும் கிடைப்பதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. பேருந்துகளில் பாடல்கள் ஒலிபரப்படுவதனால்

ஏற்படும் இரைச்சலை கட்டுப்படுத்த தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அரைச் சொகுசு பேருந்துகளை பயணிகள் சேவையிலிருந்து தடை செய்வது அரசுக்கு பெரும் நெருக்கடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து சேவையில் ஈடுபடும் பிரபல தனியார் நிறுவனங்களிடம் பல நூற்றுக் கணக்கான அரைச் சொகுசு பேருந்துகள் உள்ளன. அந்த நிறுவனங்களுடன்

பகைத்துக் கொண்டு அரைச்சொகுசு பேருந்துகளை சேவையிலிருந்து நிறுத்துவது அரசுக்கு கடினமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்