Sat. May 18th, 2024

அபிவிருத்தி உத்தியோகத்தர் 239 பேருக்கு நியமனம்

பொதுமக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 239 பேருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று  வியாழக்கிழமை  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2019ம் ஆண்டுக்கான இரண்டாம்,  மூன்றாம் கட்ட நியமனங்களே வழங்கப்பட்டது.
யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர் திரு.ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களாகிய நீங்கள் அனைவரும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை தடையின்றி  வழங்கல் வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்கான அனைவரதும் ஒன்றிணைந்த சேவையின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தியதோடு, சேவை வழிகாட்டி அறிவுரைகளையும், சிங்கள மற்றும் ஆங்கில மொழித் தேர்ச்சியின் முக்கியத்துவத்தையும் நியமனம் பெற்றவர்களுக்கு  எடுத்துக் கூறியுள்ளார்.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக
பிரதான உள்ளக கணக்காய்வாளர் ,
பிரதம கணக்காளர் , திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,மற்றும் புதிதாக  நியமனம் பெற்றவர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்