Wed. May 15th, 2024

அதிகார பகிா்வு வேண்டுமானால் சஜித் பிறேமதாஸவுக்கு வாக்களிங்கள்! கேட்கிறாா் ரணில்.

ஐ.தே.கட்சிக்கு வாக்களித்தமையினாலேயே இலங்கையில் ஜனநாயகம் உருவானது.  எனவே ஜனநாயகம், அதி கார பகிா்வு வேண்டுமானால் தமிழ் மக்கள் சஜித் பிறேமதாஸவுக்கு வாக்களிக்கவேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று (03-11-2019) கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில்  இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  உரையாற்றும் போது

அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . மேலும், தற்பொழுது நாட்டில் வெள்ளை வேன் வருவது கிடையாது, ஆனால் மக்களை தேடி அவசர அம்பூலன்ஸ் வருகிறது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக்கு வாக்களித்தால்  வெள்ளை வேன் மட்டுமே வரும் என பிரதமர் தெரிவித்தார்.

அத்தோடு, 2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம்  இந்த நிலைமை தொடர வேண்டுமா?

வேண்டாமா?  நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம்  எனத் தெரிவித்த அவர் 2015க்கு பின் புதிய அரசியலமைப்பினை

ஏற்படுத்த முயற்சித்த போதும் பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது.

ஆனால் புதிய அரசிலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவரவேண்டுமானால்  மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள்தான் ஒன்று வரும் 16 ஆம் திகதி

அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது பாராளுமன்றத்தில் 120 க்கு மேற்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது என்றார்.

மேலும், கிளிநொச்சியை அபிவிருத்தியை செய்வதற்கு  நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். இந்நிலையில்,

இக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்தன, ஹரிசன்,விஜயகலா மகேஸ்வரன் மற்றும்  பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்