Wed. May 15th, 2024

விரும்பிய ஒருவருக்கு வாக்களியுங்கள் என்பது சாியான தலமைத்துவம் அல்ல. அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம்.

நீங்கள் விரும்பும் ஒருவருக்கு வா்களியுங்கள் என கூறுவது தமிழ் மக்களுக்கு நாங்கள் கொடுக்கும் சாியான தல மைத்துவம் அல்ல. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா்.

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் நிறைவில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இருக்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு மற்றும், நாடாளுமன்ற குழு,

கூட்டங்களிலும் இது பற்றி ஆராயபட்டிருந்தது. இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டி இடுகின்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும்

என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ செயற்குழு இன்றையதினம் எடுத்திருந்தாலும்,

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவின் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம். மற்றைய இரண்டு கட்சித் தலைவர்களோடும் கலந்தாலோசித்து

இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். பல விடயங்களை ஆராய்ந்திருக்கிறோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில்தான்

எமது கருத்துக்கள் இருந்தன. அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு

நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம். எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள். மக்கள் திறமைசாலிகள்,

அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களிற்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.

ஆகவே மக்களுடைய கருத்தையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுவது அல்ல.

அரசியல் சூழ்நிலையிலே தமிழ்மக்கள் சார்பாக ஏனைய தரப்புகளுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சுக்கள் நடாத்துகிறோம்.

அந்தக்கடப்பாட்டை நாம் சரிவர செய்வதாக இருந்தால் மக்களிற்கு ஒரு வழிகாட்டுதல் கொடுக்கவேண்டிய அத்தியவசிய கடப்பாடு இருக்கிறது. அதை நாங்கள் செய்வோம் – என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்