Fri. May 17th, 2024

அடுத்த மாதம் வரும் 260,000 அஸ்ட்ராஸினெகா தடுப்பூசிகள்

உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் வசதி மூலம் இலங்கைக்கு அடுத்த மாத தொடக்கத்தில் 264, 000 அஸ்ட்ரா ஸினெகா தடுப்பூசிகளைப் பெறவிருக்கிறது என்று கொழும்பு ஆங்கில பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அதிகாரப்பூர்வ கடிதத்தில் சுகாதார அமைச்சகத்திற்கு மருந்துகளை வழங்குவது மற்றும் வந்தடையும் திகதி என்பவற்றை உறுதிப்படுத்தியுள்ளது. இவைகள் ஜூலை மாத தொடக்கத்தில் வந்தடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

WHO மேற்கொண்ட கோரிக்கையையடுத்து , கோவாக்ஸ் வசதிக்கு அஸ்ட்ரா ஸினெகா தடுப்பூசியை அதிகமாக வாங்கிய சில வசதியான நாடுகளால் இந்த அளவுகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக தெரியவருகிறது .
முதல் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த சுகாதார அமைச்சகம் இப்போது தயாராகி வருகிறது. . இந்த 264,000 டோஸின் வருகையுடன், சுகாதார அமைச்சகம் இன்னும் 336,000 டோஸ் அஸ்ட்ராஸினெகா தடுப்பூசிகள் தேவைப்படும் என்று தெரியவருகிறது.
ஏற்கனவே இரண்டாவது தடுப்பூசி வழங்கலின் பொழுது சுகாதார அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் தற்பொழுது வரும் தடுப்பூசிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியே

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்