Sun. Apr 12th, 2026

வட்டுகோட்டையில் மகளிர் தின எழுச்சிப் பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சரவணபவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை மகளிர் அணி நடத்தும் மகளிர் தின எழுச்சிப் பேரணியும், மகளிர் தினமும் இன்று திங்கட்கிழமை நடந்தது.

காலை 9 மணிக்கு சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி முன்பாக மகளிர் தின எழுச்சிப் பேரணி ஆரம்பமாகி பேரணி சுழிபுரம் பிரதேச சபை மண்டபத்தை வந்தடைந்தது இதில் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில், சுழிபுரம் பிரதேச சபை மண்டபத்தில் மகளிர் தின நிகழ்வுகள் ஆரம்பமாகி. இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed