யா / கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தின் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு

யா / கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் கடந்த 2023 ம் ஆண்டு நடைபெற்ற தரம் – 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நாளைய தினம் 2024-01-07 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.
இம்முறை நடைபெற்ற தரம் – 5 புலமைபரிசில் பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அத்துடன் இப்பரீட்சையில் 44 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் 51 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நாளை பாடசாலை வளாகத்தில் அதிபர் திரு. மகாதேவன் மாககேதீஸ்வரன் தலைமையில் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை வைத்திய அதிகாரி செல்வி. பிரியந்தி தர்மராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி. வசந்தி முருகானந்ததாஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
இப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் மற்றும் அவர்களை தயார்ப்படுத்திய அதிபர், ஆசிரியர்களையும் மேலும் பல வெற்றிகளை பெற பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் வாழ்த்துகின்றனர் .

புள்ளி 170

புள்ளி 170

புள்ளி 166

புள்ளி 166

புள்ளி 165

புள்ளி 164

புள்ளி 162

புள்ளி 162

புள்ளி 161

புள்ளி 160

புள்ளி 159

புள்ளி 156

புள்ளி 156

புள்ளி 155

புள்ளி 154

புள்ளி 154

புள்ளி 154

புள்ளி 152

புள்ளி 150

புள்ளி 149

புள்ளி 147


