Sat. Apr 11th, 2026

முன்னாள் இந்தியா வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சற்று முன்னர் காலமானார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம் செயல் இழந்ததன் காரணத்தினால் இறப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்கும் போது அவருக்கு வயது 67. வைத்தியசாலைக்கு மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டு சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வடடாரங்கள் தெரிவித்தன.
நரேந்திர மோடியின் முதலாவது அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக இருந்த அவர், கடந்த தேர்தலில் உடல்நல குறைவு காரணமாக போட்டியிடாமல் ஒதுங்கியே இருந்தார். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உள்ளாகி இருந்தார்.
நரேந்திர மோடி உட்பட பல இந்திய மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் அவரின் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றார்கள்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed