மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்டவர் தவறி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த ஏ.நிஷாந்தன் என்ற 29 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்