மாணவர்களின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில்மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்ட நிகழ்வு
மாணவர்களின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின்
வேலைத்திட்டத்தின் நீட்சியாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு வடமாகாணத்தில் வைபவ ரீதியாக கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமாகாணத்தில் 903 பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் திட்ட நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் மதிய உணவிற்கான பெறுமதி ஒரு மாணவருக்கு 110 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அறிவித்துள்ளார். அத்துடன் இத்திட்ட செயற்பாடு இரண்டு வகையாக வழங்கப்படவுள்ளது. தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான சகல மாணவர்களும், அடுத்து 100 மாணவர்களுக்கும் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வடமாகாண செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர், வித்தியாசாலை அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.