Sun. Apr 21st, 2024

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் டி.ரக்சனா தங்கம்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் சிவகுமரன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த டி.ரக்சனா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் சிவகுமரன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த டி.ரக்சனா தங்கப் பதக்கத்தையும்
சிறிஅம்பாள் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த பா.பானுஷா வெள்ளி பதக்கத்தையும், சோளங்கன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த த.கம்சாயினி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.
பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் வழங்கி வைத்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்