Wed. Sep 18th, 2024

பிரித்தானியாவில் கோர வீதி விபத்தில் மூன்று தமிழ் பெண்கள் பலி

பிரித்தானியாவில் மேற்கு சசெக்ஸ் பகுதியில் இரண்டு கார்கள் மோதிய கோர வீதி விபத்தில் மூன்று தமிழ் பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மகன் காயமடைந்துள்ளார் என்பதை லண்டன் தமிழ் வட்டாரங்கள் உறுதிசெய்தன.

இவர்கள் பயணம் செய்த பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திச் சென்றவர் எனக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் சாவடைந்துள்ளார். அவர்களது பெயர் விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்