Sun. Apr 12th, 2026

நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது.

நயினாதீவு வருடாந்த உற்சவம் கொரோனா குறையும் காலம் வரை  பிற்போடப்பட்டுள்ளதாக ஆலயத்தின் அறங்காவலர் சபையினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாளை மறுநாள் நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் குறித்த ஆலய நிர்வாக உறுப்பினர்களுடன் ஆரம்பமாகவிருந்தது.
இன்று காலை அறங்காவல் சபையினர் ஒன்று கூடி நாளை மறுதினம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் கொரோனா தொற்று குறையும் காலத்தில் பொருத்தமான நாளைத் தெரிவு செய்து  உற்சவத்தை நடாத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed