தமிழருக்கு பெருமை சேர்க்கும் கனடா தமிழர் நிஷான் துரையப்பா
யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழரான நிஷான் துரையப்பா கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைமை பொலிஸாராக பதவி ஏற்கவுள்ளார் . தற்போது ஹால்டன் பகுதியின் துணை போலீஸ் தலைவராக உள்ள நிசான் வரும் அக்டோபர் முதலாம் திகதி ஒண்டாரியோவின் பொலிஸ் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார். இதன் மூலம் தென் ஆசியாவில் இருந்து இந்த பொறுப்பை பெரும் முதல் நபர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார்.
போலீஸ் சேவையில் 25 வருட சேவையினை பூர்த்தி செய்து இருக்கும் நிஷான், 2015 ஆம் ஆண்டு ஹால்டன் பிரதேச துணை பொலிஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கபட்டார். போலீஸ் துறையின் பல்வேறு பட்ட நடவடிக்கைகள் மற்றும் பகுதிகளில் தனது திறமையை வெளிக்காட்டியதன் பலனாகவே அவர் இந்த பதவிக்கு உயர்ந்திருப்பதாக கனடா போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இவருக்கு ஒண்டாரியோ பகுதியில் இருக்கும் பல்வேறு மேயர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.
இவர் முன்னாள் யாழ்ப்பாண மேஐர் அல்பிரட் துரையப்பாவின் உறவுக்காரர் ( மருமகன் ) என்பது குறிப்பிடத்தக்கது