தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாதெல் மீலாது இப்ராஹீம் சேர்ந்த மேலும் மூன்று பேர் பொலிசரால் கைது
தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாதெல் மீலாது இப்ராஹீம் ( JMI ) சேர்ந்த மேலும் மூன்று பேர் பொலிசரால் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இந்த இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் இடமிருந்து நுவரேலியாவில் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. முதலாவது சந்தேக நபர் பொலநறுவை கதுருவெல பகுதியை சேர்ந்த மொகிதீன் பாவா மொஹமட் ராம் என்றும் இவர் அபு அக்ரன் என்று அழைக்கப்பட்டு இருந்தார்.
இரண்டாவது சந்தேக நபர் மாவனெல்லா தனகம பகுதியை சேர்ந்த மொஹமட் ரியால் மொஹமட் சஜித் என்றும் இவர் அபு சல்மான் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சி எடுத்துள்ளார்கள் என்று நம்பப்படுகிறது .
மூன்றாவது சந்தேகநபரான மொஹமட் ரம்சின் ருஷ்டி அஹ்மத் என்பவர் வரக்காபொல துல்ஹிரிய நன்ஹேல்ல பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் சஹ்ரானுடன் ஹம்பாந்தோட்டை பகுதியில் பயிற்சி எடுத்தவர் என்றும் தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கிறார்கள். புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் அம்பாறையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்