கலப்பு அஞ்சல் ஓட்டத்தில் சிவகுமரன் அணி தங்கம்
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கலப்பு அஞ்சல் ஓட்டத்தில் சிவகுமரன் விளையாட்டு கழகம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலப்பு அஞ்சல் ஓட்டத்தில் சிவகுமரன் விளையாட்டு கழகம் தங்கப் பதக்கத்தையும் பியூஸ்ரார் விளையாட்டு கழகம் வெள்ளிப் பதக்கத்தையும் சோளங்கன் விளையாட்டு கழகம் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். இவர்களுக்கான சான்றிதழ்களை வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஜசீலன் வழங்கி வைத்தார்