உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் புதிய அதிபராக ப.செல்வவிநாயகம் அவர்கள் கடந்த 6ம் திகதி முதல் தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
கல்லூரியின் அதிபராக இருந்த எஸ். புவனேந்திரராசா கரவெட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதை அடுத்து வெற்றிடமாக இருந்த அதிபர் பதவிக்கு அதிபர் தரம்1சேர்ந்த பரஞ்சோதி செல்வவிநாயகம் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் வரணிமகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வடமாகாண கல்வித் திணைக்களத்துல் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.