ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் ஆர்.நதுமிதன் தங்கம்

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஆர்.நதுமிதன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஆர்.நதுமிதன் தங்கப் பதக்கத்தையும், வல்வை விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஆர்.பிரதாபன் வெள்ளிப் பதக்கத்தையும், துள்ளுமீன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த
கே.சபேஸ்கரா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.