Sat. May 18th, 2024

டெங்கு கட்டுப்பாட்டை மேற்கொள்ளப்பட்டாத இருவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம்

டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமாக இருந்த இரு வீட்டு உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார பணிமனைக்கு உட்பட்ட நெல்லியடி மற்றும் கரணவாய் பகுதியைச் சேர்ந்த இருவருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி மற்றும் கரணவாய் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழ்நிலை காணப்பட்ட போது சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டு அதன் பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தொடர் மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழ்நிலை காணப்பட்டமையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவிலுள்ள ஒருவருக்கும், கரணவாய் பொதுச் சுகாதார பிரிவிலுள்ள ஒருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்