சஜித் அணி சின்னத்தை அறிவித்தது!!
ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
சின்னம் தொடர்பில் எவ்வித சட்டச் சிக்கல்களும் ஏற்படாது. தேவையான ஆவணங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க jகவல் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.