Fri. May 17th, 2024

Teqball வல்வெட்டித்துறையில் அறிமுகம்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய TeqBall  முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று  சனிக்கிழமை காலை 9  மணிக்கு வல்வெட்டித்துறை வல்வை  விளையாட்டு அரங்கில் (futsal  play ground) நடைபெற்றது. யாழ்மாவட்ட இணைப்பாளராக சிவா  ஜீவிந்தன் அவர்களை இலங்கை ரெக்பந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளதுடன் இவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான ரெக்பந்தாட்ட திட்டமிடல் முகாமையாளர் மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக முகாமையாளர் சிவராஜா கோபிநாத்
சம்மேளனத்தின் உயர் அதிகாரிகளான ரஞ்சித் ஜெகமோகன் – இலங்கை தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் மற்றும் வைத்திய கலாநிதி. கணேசநாதன் ஆகியோரும் வருகைதந்து உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், நிகழ்வில் யாழ்மாநகர சபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன் யாழ்மாவட்ட சிறைச்சாலை ஆணையாளர் மொகான் கருனாரட்ன, வடமாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் பா.முகுந்தன், யாழ் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆ. வசந்தன், கிளிநொச்சி கால் மேசைப்பந்தாட்ட இணைப்பாளர் அனுராகாந்தன், முல்லைத்தீவு கால் மேசைப்பந்தாட்ட இணைப்பாளர்
சுரேந்தர். கரவெட்டி விளையாட்டு உத்தியோகத்தர், வல்வை விளையாட்டு அரங்க உரிமையாளர் சபா இராஜேந்திரன், பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்தலைவர். வடமராட்சி உதைபந்தாட்ட லீக் தலைவர் .பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் நடுவர் சங்கதலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்