Fri. May 17th, 2024

கடற்கரை கரப்பந்து விண்ணப்பம் கோரல்

கடற்கரை கரப்பந்தாட்ட பயிற்சிநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
சர்வதேச கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் (FIVB) இனால் அனுப்பப்பட்டுள்ள, பின்லாந்திலிருந்து வருகைதந்துள்ள பயிற்றுவிப்பாளரினால் நடாத்தப்படவுள்ள 5′ நாட்களிற்கான கடற்கரை கரப்பந்தாட்ட பயிற்சி நெறி நடைபெறவுள்ளது. இப்பயிற்சி நெறிக்கு வட மாகாணத்திலிருந்து இருவர் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நெறி எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. ஆங்கிலம் அல்லது சிங்கள மொழி மூலமே இப்பயிற்சி வழங்கப்பட்டவுள்ளது. உணவு, தங்குமிட மற்றும் இதர செலவுகளிற்கான கட்டணம் அறவிடப்படும்.

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஈடுபாடுள்ள, பயிற்சிநெறியின் பின்னர் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து கடற்கரை கரப்பந்தாட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படுவதில் ஆர்வமுள்ள வட மாகாணத்தினை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படீகின்றீர்கள்.

தங்களது சுயவிபரக்கோவையினை இன்று 28.03.2021 மாலை 6.30 மணிக்கு முன்னதாக jaffnavolleyball@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தகவற்களிற்கு,
அ.ரவிவர்மன் – 0773870889 தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்