31 கிலோ 500 கிராம் கஞ்சா மீட்பு கொண்டு வந்தவர்கள் அகப்படவில்லையாம்
கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் நேற்று இரவு 31 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அதனைக் கொண்டு வந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொடிகாமம் பொலீஸாருடன் இணைந்து நடாத்திய தேடுதல் வேட்டையில் கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் 31கிலோ 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் நேற்று காலை பளைப் பகுதியில் 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன