Wed. May 15th, 2024

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும்-மஹிந்த

பொதுஜனபெரமுன ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்கி மாகாணங்களுக்கான கூடுதலா அதிகாரங்களை வழங்க முயற்சிப்போம் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மேலும் அரசமைப்பின் 19 வது திருத்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

உருவாக்கப்படும் புதிய அரசசியலமைப்பின் உள்ளடக்கங்கள் குறித்து எதிர்காலத்திலேயே முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் மாகாணசபைகளின் செயற்பாடுகள் உட்பட அதிகளவு அதிகார பகிர்வு குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து அதிக கவனத்தை செலுத்துவோம் எனவும் இரண்டுமே அகல பாதாளத்தில் உள்ளதாக தெரிவித்தார்
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்படுவதாக நாளாந்தம் செய்திகள் வெளியாகின்றமையால் மக்கள் இன்று உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் வாழ்கின்றனர், என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச மிகவும் திறமையான வேட்பாளர் அவர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டமொழுங்கை உறுதி செய்வார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடவில்லை என சிலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுள்ளனர் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கட்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , கோத்தபாய குடியுரிமையை கைவிட்டுவிட்டார் என என்னால் நிச்சயமாக கூறமுடியும் என்றும் தெரிவித்தார்
.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்