Sat. May 18th, 2024

16 கோலூன்றி பாய்தல்ஐ.பிரியந்தன் தங்கம்

யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்திய 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் வீனஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஐ.பிரியந்தன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் வீனஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஐ.பிரியந்தன் 3.20 மீற்றர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், விக்டோரியா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.ஞானதீபன் 3.10 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும்,  அதை கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த என்.கிருஸ்ணா 2.90 மீற்றர் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்