Fri. May 17th, 2024

132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அக்கறை காட்டுங்கள்

கண்டி மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் கண்டி மாவட்ட 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்ஹ, கண்டி மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், சுமார் 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிறுமிகளின் பெரும்பாலானோர் தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டள்ளமையானது பெரும் அபாயகரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில், 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 6 ஆயிரத்து 307 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்