Sun. May 19th, 2024

வேலை நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அரசாங்க ஊழியர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை

வேலை நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அரசாங்க ஊழியர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உவா மாகாண ஆளுநர் மைத்ரீ குணரத்ன கூறினார்.

பேஸ்புக், வைபர், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைத்தள பயன்பாடுகளை தங்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தும் அரசாங்க ஊழியர்கள் மக்களைப் புறக்கணிப்பதாக பல புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.

ஊவா மாகாண ஆளுநராக நான் கடமைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, சில பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளைச் செய்யாமல் பேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக பல புகார்கள் கிடைத்தன . இந்த அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உயர் அதிகாரிகள் அனைவரையும் கடமையில் இருக்கும் வேளைகளில் சமூக வலைதள பயன்பாட்டை நிறுத்துமாறு நான் கேட்டுக்கொண்டேன் . எந்தவொரு அரசாங்க அதிகாரியை பற்றி எனக்கு இனிமேல் எதாவது புகார்கள் வந்தால், நான் முதலில் அவர்களை வேலையை விட்டு நீக்கிய பின்னரே , ஒழுங்கு விசாரணையை மேற்கொள்வேன் என்று ஆளுநர் கூறினார்.

கடமையில் இருக்கும்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் அரசு ஊழியர்களின் புகைப்படங்களை அனுப்புமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் . அவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் அந்த சேவை முழுமையாக வழங்க வேண்டும்.

அவர்கள் வேலை செய்யும் எல்லா நேரத்தை கணக்கிலெடுத்தாலும் அரசு ஊழியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட வேலை செய்ய மாட்டார்கள் என்றும் ஆளுநர் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்