Thu. May 16th, 2024

வீதிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அதிரடியாக நீக்கம்

கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற கையோடு , அரச அலுவலகங்கள் மற்றும் வீதிகளில் அரசியல் வாதிகளின் படங்கள் காட்சிப்படுத்தக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நாட்டின் பலப்பகுதிகளிலும் உள்ள அலுவலகங்கள் மற்றும் வீதிகளில் உள்ள அரசியல் வாதிகளின் படங்கள் அதிரடியாக நீக்கப்படுவருகின்றன.
இந்த நிலையில் ஜா ஏல பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் படம்பொறித்த கட்அவுட் ஒன்று வீதியில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறது.
இதேநேரம் இன்று மட்டக்களப்பு அரச செயலகத்தில் திடீரென புகுந்த இனந்தெரியாதோர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரின் படங்களை எடுத்துச்சென்றுள்ளார்கள்.

தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தனது பெயரில் துறைமுகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை பெயரிட்டு வருகையில் கோத்தபாய ராஜபக்சவின் இந்த செயற்பாடு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்