Tue. May 14th, 2024

விருச்சிகம் இராசிக்காரர்களுக்கு 2023 எப்படி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று சுக ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும். புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் திருமணம், மகப்பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனை கவனிக்கவும். குடும்பநலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும். வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்குமாதலால் சமாதானமுறையில் பேசி சமாளிக்க வேண்டியது அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி – தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் காணவும் வாய்ப்புண்டு. வில்லங்கம் ஏதும் உருவாகாது. தொழில் சிறப்படையும். தொழிலில், வியாபாரத்தில், விவசாயத்தில் எதிராளியின் தொல்லை காணாமல் போகும். வியாபாரிகளுக்கு நஷ்டம் தவிர்க்க முடியாமல் போகலாம். எனினும் அதை சமாளிக்கும் சூழ்நிலையும் உருவாகும்.

அரசியல்வாதிகள் பாராட்டுப் பெறுவார்கள். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். மிகவும் நெருக்கடியான உருவானாலும் அதை எச்சரிக்கையுடன் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பலவிதமான சங்கடங்கள் தோன்றினாலும் உண்மைத் தொண்டர்களின் உதவியுடன் அதை சமாளிப்பீர்கள். கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். தொழிலில் ஏற்றமும், தொழிலாளர்களுக்கு சந்தோஷமும் உண்டாகும். கற்றறிந்த வல்லுநர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடை இருக்காது. விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் உழைப்பு அறியப்படும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்படலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட இடமுண்டு. குறுக்குவழியில் ஈடுபடாதீர்கள். பெரியோர்களின் நல்லாசியைப் பெறுவதில் குறியாயிருங்கள். தெய்வ சிந்தனையோடு இருங்கள். மாணவர்களுக்கு சோதனை மிகுந்து காணப்படும் நேரம் ஆதலால் பொறுமையுடன் இருங்கள். பெரியோர்கள் ஆலோசனையின்படி நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் தொல்லை குறையும்.

விசாகம் 4 ம் பாதம்: இந்த ஆண்டு கடன் தொல்லை தீரும். முன்விரோதம் காரணமாக இருந்துவந்த சில சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். உடல் நலம் முன்னேற்றமடையும். பொதுவாகச் சங்கடங்கள் பல ஏற்படுமானாலும், அதனைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் சீராக இருக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டு. பொறுமையுடன் நடந்து கொண்டு, சமாளிக்க
வேண்டியது அவசியம். தொழிலாளர்கள் பணிபுரியும்போது கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம்: இந்த ஆண்டு நற்பலன்களும், தீய பலன்களும் கலந்தவாறு இருந்துவரும். இருந்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய வகையிலேயே தொல்லைகளின் தன்மை இருந்து வரும். மனம்தான் சற்று சஞ்சலத்துக்கு உட்பட நேரும். தெய்வப்பணிகளில் ஈடுபட்டு மனோதிடம் பெறமுயலுங்கள். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் அவப்பெயரிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். சாமர்த்தியமாக அவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட இடமில்லை.

கேட்டை: இந்த ஆண்டு நன்மைகள் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக சில சங்கடங்கள் இருக்கும். பெரிய மனதோடும் தெய்வபக்தியோடும் இருந்து அவற்றைச் சமாளிக்கவும். மனத்தை மட்டும் தளரவிடாதீர்கள், அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை இருக்காது என்றாலும் ஒருவிதமான பீதி இருந்து வரும். சாமர்த்தியமாக நடந்து கொண்டால் அரசியல்வாதிகள் அவமானப் படக்கூடிய நிலையிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சச்சரவுக்கு இடம் அளிக்காதீர்கள். வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. செய்யும் தொழிலில் சிக்கல் வராது. கொடுக்கல்-வாங்கலில் நிதானம்தேவை.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்