Tue. May 21st, 2024

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ சுயேட்சையாக போட்டியிட தீர்மானம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்கு சரியான ஆசன ஒதுக்கீட்டை வழங்காத நிலையில் ‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ எனும்    சுயேட்சைக் குழு சார்பில் முன்னாள் போராளிகள் வடக்கு-கிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
-மன்னாரில் இன்று திங்கட்கிழமை(16) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
நாட்டில் மக்கள் அனைவரும் கொரோனா வைரசின்  பாதீப்பினால் அச்சமடைந்துள்ளனர். இச் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த நாடு முகம் கொடுக்க உள்ளது.இத்தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
எமது நாட்டடில் இந்த நோய் அதிகரிக்குமாக இருந்தால் உண்மையில் எமது நாடு சுடுகாடாக மாறிவிடும்.எனவே இந்த வைரசினை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ என்கின்ற கட்சி ஊடாக எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்.
கடந்த வாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தேன்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை உறுவாக்கியது எமது தேசிய தலைவர்.தேசிய தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் , மாவீரர் குடும்பங்களில் இருக்கின்றவர்கள், எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள்,பெண் போhளிகள் உற்பட பலர் இருக்கின்றார்கள்.
அவர்களை ஆரம்ப காலத்தில் தேர்தலில், ஜனநாயக நீரோட்டல் இணைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பல பொது கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் எமது தலைமைகள் இவர்களை உள்வாங்காமல் இருந்ததிற்கும் நியாயமான காரணம் இருந்தது என்பதனை நான் நம்புகின்றேன்.
ஆனால் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்று வரை இவர்களை எமது அரசியல் நீரோட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் இருப்பது விடுதலை புலிகளின் தியாகங்களும்,வீரச் செயல்களும்.
எனவே அவர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமானது.எனவே வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் முன்னாள் போராளிகளை முன்னுரிமை அடிப்படையில் அவர்களை உள்வாங்குங்கள்.
எமது பகுதிகளில் சமைய ரீதியாக பிளவு பட்டுள்ளோம்,பிரதேச ரீதியாக பிளவு பட்டு நிற்கின்றோம்,பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பின் எமது மக்கள் பிளவு பட்டு நிற்கின்றனர்.இவை அனைத்தையும் நாங்கள் ஒற்றுமைப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில்  எமது இனத்திற்காக விதைக்கப்பட்ட உயிர்களுக்கு நாம் அர்த்தம் தேட   வேண்டுமாக இருந்தால் உண்மையாக தேசிய தலைவரினால் வளர்க்கப்பட்ட வலியை உணர்ந்தவர்களை கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை உள் வாங்கி இருக்க வேண்டும்.
அதற்கான கோரிக்கை உங்களிடம் விடப்பட்டுள்ளது.மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும்.தேர்தல் பிற்போடப்பட்டால் கால தாமதமாக கதைக்க முடியும்.தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கைக்கு இது வரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
இதனை உணர்ந்த விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்கு சரியான ஆசன ஒதுக்கீட்டை வழங்குவதாக இருந்தால் சுயேட்சைக்குழு சார்பில் முன்னாள் போராளிகள் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவ்விடையத்தில் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். போராளிகளுக்கான ஆசன ஒதுக்கீட்டை கொடுப்பீர்கள் என்றால் எதிர் காலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலமாக கட்டி எழுப்புவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.
சந்தர்ப்பத்தை கை விடுவீர்கள் என்றால் பல உதிரிக்கட்சிகளாக இருக்கின்ற கட்சிகள் மட்டுமல்ல எங்களுடைய தமிழ் பிரதேசங்களில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் இருக்கின்ற இடம் தெரியாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதனையும் வெகு விரைவில் உணர்வீர்கள்.தமிழ் தேசியக்கூட்டமைப்பு நான் விட்ட கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள் என்றால் நாங்கள் தீர்மானத்தை மாற்றி அமைப்போம். கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றால் எமது பயணம் தொடரும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்