Fri. May 17th, 2024

வவுனியாவில் பல பகுதிகள் மூடல்

வவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதுடன் நகரிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (09.01.2021) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கடந்த 6ம் திகதி தர்மலிங்கம் வீதி , பஜார் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரம் 204 நபர்களுக்கு பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது. அதல் 54 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அந்த அடிப்படையில் இன்றையதினம் விசேடமான ஒர் கலந்துரையாடல் ஒன்று வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதார பிரிவினர் , வன்னி பாதுகாப்பு படை பிரிவினர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களுடன்  இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளிற்கு அமைவாக நகரில் முக்கிய இடங்களில் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு பி.சி.ஆர் பெறுபேறு வரும் வரை குறித்த வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி முன்றயிலிருந்து குடியிருப்பு பிள்ளையார் கோவிலடி சந்தி வரையிலும் , இறம்பைக்குளம் பெண்கள் பாடசாலை சந்தியடி , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சந்தி , மன்னார் வீதியில் காமினி மாகா வித்தியாலயம் வரையிலான வீதி , புகையிரத நிலைய வீதி ஆகியவற்றினை மறு அறிவித்தல் வரை மூடுவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இவ்விடயம் தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் பாதிப்படையாது இருக்கும் வகையில் கூட்டுறவு சங்கம் , மருந்து விற்பனை நிலையம் , சதோச விற்பனை நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் மாதிரிகளை பெற்று அதன் பெறுபேற்றினை முன்வைக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்