Sun. May 19th, 2024

வல்வெட்டித்துறை நகரசபை பாதீடு தோல்வி

வல்வெட்டித்துறை நகரசபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும்  ஒரு வாக்கால் தோல்வி அடைந்துள்ளது. கடந்த  முறை நடைபெற்ற கூட்டத்தில் ஒரு வாக்கினால்  வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
நகரசபை சட்ட திட்டங்களுக்கமைய
இரண்டாவது  தடவையாக இன்று
செவ்வாய்க்கிழமை (30) வரவு செலவுத் திட்டத்தை சபைத் தலைவர்  செல்வேந்திரா சமர்ப்பித்து போது  வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் பாதீடு தோல்வி    மீண்டும்  தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பின் போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களுமாக 9 பேர்
எதிராகவும்,  சுயேச்சைக் குழு 4 உறுப்பினர்களும்
ஈ .பி. டி .பி. 2 உறுப்பினர்களும்  ஈ .பி. ஆர். எல். எப் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலா ஒரு உறுப்பினர்
களுமாக 8 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதனையடுத்து சபைக்கு புதிய தலைவர், உப.தலைவர் தெரிவு  செய்யப்பட்ட வேண்டியநிலை உருவாகியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்