Tue. May 14th, 2024

வடமராட்சி புலோலி பகுதியில் மீண்டும் கொள்ளையர்களின் அட்டகாசம், கையாலாகாத பொலிஸார்

வடமராட்சி புலோலி பகுதியில் மீண்டும் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் இரவு பொழுதை கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியின் புலோலி தெற்கு பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்குள் எட்டுக்கும் அதிகமான கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இது தொடர்பில் எவரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் ஒரு நாளில் மேற்கொண்டுவிட்டு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்ட காரணத்தினாலும் காங்கேசன்துறை பிராந்தியத்தில் இருந்து புலனாய்வு பொரலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் இன்று நேற்று புதன்கிழமை(16) அதிகாலை 1.30 மணியளவில் புலோலி தெற்கு, உபயகதிர்காமம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

வீட்டார் விழித்துக் கொண்டதன் காரணமாக கொள்ளையர்கள் தம் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று புதன்கிழமை(16) மதியம் புலோலி தேவரன் பகுதியிலுள்ள ஒன்று பட்டப்பகல் வீட்டு கதவை உடைத்து உள் நுளைந்த   திருடர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

புலோலி  பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளைகளும் திருட்டுகளும் அதிகரித்து வருகின்ற நிலையில் பருத்தித்துறை பொலிசாராலோ அல்லது காங்கேசன்துறையிலிருந்து அழைக்கப்பட்ட விசேட பொலிசாராலோ கொள்ளையர்களை இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் பொதுமக்கள் அச்சத்துடனேயே தமது பொழுதை கழித்து வருகின்றனர்.

எனவே இது குறித்து பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்து மேலதிக பொலிஸ் புலனாய்வாளர்களை அமர்த்தி கொள்ளையர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்