Sun. May 19th, 2024

ராஜபக்சக்கள் மீது மங்கள பகீர் குற்றச்சாட்டு , வாங்கிய கடனின் வட்டி அரசசெலவினங்களை விட அதிகம்

நல்லாட்சி அரசாங்கத்தின் கடன் நெருக்கடி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கைக்கு பதிலளித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, தற்போதைய அரசாங்கம் 2016 முதல் கடன் வாங்கிய பணம் அனைத்தும் ராஜபக்ஷ ஆட்சியின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக பயன்ப்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் கூறிய மங்கள சமரவீர , ராஜபக்ஷ அதிக வட்டிக்கு வெளிநாட்டுகளில் கடன் வாங்கி, அவற்றை வெள்ளை யானை கட்டுமானம் மற்றும் நுகர்வோர் இறக்குமதிக்காக செலவிட்டார் என்றார் .

ராஜபக்ஷ ஆட்சியில் தேசிய சேமிப்பு வங்கியின் (NSB)தலைவரை மாற்றி, சர்வதேச சந்தைகளில் இருந்து 750 மில்லியன் டாலர்களை 8.9 சதவீத வட்டி விகிதத்தில் பெறுமாறு கூறியுள்ளது.

அரச செலவினங்களில் 31% ராஜபக்ஷ எடுத்த வெளிநாட்டுக் கடனின் வட்டி செலுத்தலுக்காக செலவிடப்பட்டது என மேலும் தெரிவித்தார்.

இதனால் இந்த கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் நாட்டை நடத்துவதற்கும் தற்போதைய ஆட்சி அதிக கடன் வாங்க வேண்டியிருந்தது என்று நிதியமைச்சர் கூறினார்.

2018 ஆம் ஆண்டில் 63 ஆண்டுகளில் அதாவது , ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ,முதல் முறையாக வட்டி செலுத்துதல்களுக்காக ஒதுக்கி வைத்த பணம் அரச செலவினங்களை விட அதிகமாக இருந்தது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்