Tue. May 21st, 2024

ரஷ்ய பிரதமருக்கு கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது

ரஷ்ய பிரதமருக்கு கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதுரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று அறிவிக்கப்படுள்ளது

அவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்ட அதே நாளில் ரஷ்யாவில் 7,099 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டது, இதன் மூலம் ரஷ்யாவில் மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 100,000 க்கு மேல் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

திரு மிஷுஸ்டினுக்கு ஜனவரி மாதமே பிரதம மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதனுடன் அவர் ரஷ்யாவின் தொற்றுநோயைக் கையாள்வதில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார் .

தனது நோயறிதலை ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் சொல்வதை ரஷ்ய தொலைக்காட்சி காட்டியது.

வீடியோ அழைப்பின் போது பிரதமர் கூறுகையில், நான் கொரோனா வைரஸ் மீதான சோதனை செய்து தொற்று இருப்பது என்பதை நான் அறிந்தேன்.

முதல் துணைப் பிரதமர் ஆண்ட்ரி பெலோசோவ் தனது இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று திரு மிஷுஸ்டின் பரிந்துரைத்தார், திரு புடின் அதற்கு ஒப்புக் கொண்டார்.திரு மிஷுஸ்டின் இப்போது சுய தனிமைக்குச் செல்வார் என்று தெரியவருகிறது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்