Sat. May 18th, 2024

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட ஆண்கள் அணி தேசியத்தில் சம்பியன்

யாழ் மாவட்ட இளைஞர் ஆண்கள் வலைப்பந்தாட்ட அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக்  கொண்டனர்.
தேசிய மட்ட ஆண்கள், பெண்களுக்கான  மாவட்ட இளைஞர் அணிகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் கடந்த புதன்கிழமை  கிளிநொச்சி உள்ளக விளையாடரங்கில் நடைபெற்றது
இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து இரத்தினபுர இளைஞர் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் அணி 15:7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக்  கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்