Fri. May 17th, 2024

யாழ் மாவட்ட கரம் சங்கம் நாடாத்திய கரம் போட்டி முடிவுகள்

யாழ் மாவட்ட கரம் சங்கத்தினரால் சாந்தி விவசாய விதை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ரி.ராசேந்திரம் அவர்களின் அனுசரணையில் நடாத்தப்பட்ட கரம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கேடயங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.மதுஷன் தங்கப் பதக்கத்தையும், ஏபி விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். கிரிசுதன் வெள்ளிப் பதக்கத்தையும்,  ஏபி விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.யுதர்ஸன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஈ.டிசாந்தி தங்கப் பதக்கத்தையும், கே.சி.சி.சி. விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.கேசாயினி வெள்ளிப் பதக்கத்தையும், கே.சி.சி.சி. விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர். பவதாரணி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்