Mon. May 20th, 2024

யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் வலைப்பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்

யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினால் எதிர்வரும் 08,09.07.2023ம் திகதி, சனி, ஞாயிற்றுக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் பெண்கள் சுழற்சிக்கிண்ணம் மற்றும் கலப்பு அணிக்கான சுழற்சிக்கிண்ணம் என  வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
இச் சுற்றுப்போட்டிக்கு யாழ் மாவட்டத்திலுள்ள பதிவு செய்த கழகங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத கழகங்களும் தமது பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 7ம் திகதி வெள்ளிக்கிழமையன்று முன்னர் வலைப்பந்தாட்ட சங்கத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டி நிரல் தயாரிக்கப்படுவதனால் பங்குபற்றவுள்ள அணியின் கழகத் தலைவர் அல்லது அணித்தலைவர் அல்லது அணி முகாமையாளர் அல்லது அணி சம்மந்தப்பட்ட ஒருவர் கட்டாயம் பங்குபற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்