Tue. May 21st, 2024

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுகாதாரத் துறையின் பரிந்துரைகளை மீறியே யாழில் ஊரடங்கு தளர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுகாதாரத் துறையின் பரிந்துரைகளை மீறியே யாழில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோத்தபாயவுக்கும் நாட்டின் 9 மாகாணங்களின் சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை(15) இடம்பெற்ற கலந்துரையாடலின் படி கொரோனா நிலவரம் ஆராயப்பட்டு ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.


அந்த வகையில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்த்து மற்றைய மாவட்டங்களுக்கு அடுத்த வாரம் முதல் ஊரடங்கைத் தளர்த்த முடியும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.மேலும் யாழ் மாவட்டத்தில் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு, மருதங்கேணி, சாவகச்சேரி ஆகிய 6 பிரதேச செயலர் பிரிவுகளும் ஆபத்துக் குறைந்த பிரதேசங்கள் என்பதால் அங்கும் ஊரடங்கைத் தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளைப் பொறுத்து வருகின்ற மே 5 ற்குப் பிறகே ஊரடங்கைத் தளர்த்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் நாளை(20) முதல் யாழ்ப்பாண மாவட்டமும் சேர்த்து 18 மாவட்டங்களுக்கு காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்