Sat. May 18th, 2024

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்மாதிரியான செயற்பாடு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் விண்ணப்ப படிவங்களை முழுமையாக நிரப்ப  முடியாது தடுமாறுபவர்களுக்கு உதவும் முகமாக பட்டதாரி பயிலுநர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற வருவோர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்ப முடியாது தடுமாறுகின்ற வேளைகளில் அங்கு தரகர்கள் போன்று செயற்படும் சில நபர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு 50 ரூபா முதல் நூறு ரூபா வரை அறவீடு செய்து வந்துள்ளனர்

இதனைக் கண்ட பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தரகர்கள் போன்று செயற்பட்ட நபர்களை கடுமையாக எச்சரித்து இனி பிரதேச செயவகத்திற்குள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் பொலிசாரிடம் கையளிக்கப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் 19/2/2020 புதன்கிழமை முதல் பிரதேச செயலகத்திற்கு வரும் மக்கள் விண்ணப்ப படிவங்களை முழுமைப்படுத்த முடியாது தடுமாறுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பட்டதாரி பயிலுனர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். வயதானவர்களுக்கு  விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பது மற்றும் பிரதேச செயலக தேவைகளை பெற வருபவர்களுக்கு உதவிகளை செய்கின்றார்கள்

பிரதேச செயலரின் இம் முன் மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டியதுடன் ஏனைய பிரதேச செயலர்களும் நடைமுறைப்படுத்தினால் பிரதேச செயலகங்களிற்கு சேவை பெற செல்பவர்கள் தடுமாற்றம் இன்றி சேவைகளை பெற்றுக் கொள்வதுடன் தரகர்களிடம் பணத்தை இழக்கத் தேவையில்லாது இருக்கும் எனத் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்