Fri. May 17th, 2024

யாழில் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரை மீது கல்வீச்சுத் தாக்குதல்

நேற்றுக் காலை இனந்தெரியாத நபர்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரை மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன ஒற்றுமையை விரும்பாதவர்களால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் யாழ்ப்பாண நாக விகாரையின் விகாராதிபதி கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மூவினங்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதனை சீர்குலைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்
மேலும் யுத்தம் நடந்த காலப்பகுதியில் கூட நாக விகாரைக்கு ; எவ்வித சேதங்களும் ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் திடீரென தற்போது நாகவிகாரை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டுவதற்காக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்