Tue. May 21st, 2024

மைக்கல் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ரூபா 320, 000 உதவி

மைக்கல் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ரூபா 320, 000 பெறுமதியான உதவித்திட்டம் வழங்கி வைப்பு

புற்று நோய் காரணமாக உயிரிக்கு போராடும் கணவர் இரண்டு பிள்ளைகளுடன் வறுமையில் வாடும் குடும்பம்

பலாலி வசாவிளான் பகுதியை சேர்ந்த குழந்தையன் மகாராசா என்பவரின் குடும்பம் யுத்தத்தினால் பல துயரங்களை எதிர் கொண்டு பல இடங்களில் இடம் பெயர்ந்து தற்போது கரவெட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்

4 அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் இரண்டு பிள்ளைகள் கணவர் புற்று நோய் காரணமாக வாரம் இரு முறை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டி உள்ளது

மனைவி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஒரு மகள் தையல் தொழில் பயிற்சி பெற்று வருகின்றார்

ஒரு மகன் கல்வி கற்று வருகின்றார் குடும்பத்திற்கு என்று எந்த வருமானமும் இ்ல்லை மாதாந்தம் கிடைக்கும் பொதுசன உதவிக்கொடுப்பனவினையும் சமுர்த்தி கொடுப்பனவினையும் பெற்றே தமது வாழ்க்கை செலவுகளை பூர்த்தி செய்கின்றார்கள்

கணவரின் மருத்தவச் செலவுக்கு உதவி செய்யுமாறு கோரியுள்ளார் அதற்கு அமைவாக இன்று 09-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் மருத்துவச் செலவுக்கும் சுயதொழில் செய்ய தையல் இயந்திரம் ஒன்றும் பெற்றுக்கொள்ள சுவிட்சர்லாந்துநாட்டில் வாழ்ந்துவரும் மைக்கல் நேசக்கர ஒருங்கிணைப்பாளர் கணபதிப்பிள்ளை கணேசலிங்கம்ரூபா 50,000 மற்றும் மைக்கல் நேசக்கர அனுசரனையாளர் அமுர்தலிங்கம் செந்தில் ராஜா ரூபா 50,000 இருவரும் இணைந்து வழங்கிய ரூபா 100,000 வழங்கி வைக்கப்பட்டது

தேராவில் விசுவமடுவில் வசித்து வரும் இரண்டு மாவீரர்களின் தாயார் ஒருவேளை உணவிற்கு கூட வழியின்றி உள்ள நிலையில் உதவி கோரியுள்ளார்.

பாலசுந்தரம் நாகேஸ்வரிக்கு நான்கு பிள்ளைகள் இரு ஆண்பிள்ளைகள் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மாவீரரானார்கள். மற்றைய இரு பெண் பிள்ளைகள் திருமணம் செய்து திருகோணமலையில் வசித்து வருகிறார்கள். அவர்களும் போராட்ட காலத்தில் காயமடைந்து பல்வேறு இன்னல்களை முகம்கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் தாயார் தனியாக வசித்து வருகிறார். இவர் வயது முதிர்ந்த நிலையில் தனியாக இருப்பதனால் வீட்டுத்திட்டங்கள் எதுவும் கிடைக்கப்பெறாது குடிசையில் வாழ்ந்து வருகிறார். சரியான முறையில் குடிசை அமைப்பதற்கான வசதிகள் இன்மையால் தகரத்தால் சுற்றிவர அடைத்து அதில் வசிக்கிறார். மழை காலங்களில் ஒழுக்குகள் ஏற்படும். பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் இவர் அரசாங்க மாதாந்த பொதுசன கொடுப்பனவினை மட்டுமே நம்பி வாழ்கிறார். இவரது நிலையினை கருத்தில் கொண்டு உதவி புரியுமாறு வேண்டியுள்ளார் அதற்கு அமைவாக இன்று 09-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் மதிரூபா புஸ்பமலர் குடும்பம் வழங்கிய ரூபா 35,000 வழங்கி வைக்கப்பட்டது

தாயக விடுதலைப் போராட்டத்தில் நீண்டகாலம் பணியற்றிய முன்னாள் போராளிகளான தம்பதிகள் வாழ்வாதார உதவி கோரல்

தாய்மண் மீட்பிற்கான நீண்டகால போராட்டத்தில் பங்களிப்பு செய்து உறவுகளையும் உடைமைகளையும் இழந்து அங்கவீனமுற்றுள்ள தம்பதியினர் உதவிகேரியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 09ஆம் வட்டாரத்தினை சேர்ந்த தினேஸ் கவிதா வாழ்வாதார உதவி கோரியுள்ளார்.

இவரும் இவரது கணவரும் முன்னாள் போராளிகளாக இருந்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தத்தில் கவிதா தனது வலது காலினை இழந்துள்ளார்.

அதேபோல் 2009 இறுதி யுத்தத்தில் கணவர் காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் தாய் தந்தை உறவினர்கள் என்று யாருடைய உதவியும் இல்லை. கணவரது வேலைகளையும் கவனித்து கூலி வேலைக்கு சென்று தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு நீண்டகாலம் குழந்தை பேறின்றி தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து ஒருமாதம் கூட பூர்த்தியாகாத நிலையில் குழந்தைக்கான செலவுகளையும் பிறசெலவுகளையும் ஈடுசெய்யமுடியாது துன்பப்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் குழந்தையின் செலவுகளிற்காகவும் வாழ்வாதாரத்திற்கும் உதவி கோரியுள்ளனர் அதற்கு அமைவாக சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் மைக்கல் நேசக்கர அனுசரணையாளர்களான சுதர்சன் அலிசா மற்றும் ஆனந்தராசா, அரசேந்திரன் இருவரும் வழங்கிய ரூபா 35,000 வழங்கி வைக்கப்பட்டது

யா / நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கிருஷ்ணகோபால் கௌதமன் இலங்கை தேசிய கபடி அணிக்கு தெரிவகி ஈரான் நாட்டிக்கு சென்றுள்ளார் விளையாட்டிலும் கல்வியிலும் சிறந்து விளங்கிய போதும் குடும்ப வறுமை சூழ்நிலை அவருக்கு தடையாக உள்ளன இன்நிலையில் இருவிடயங்களையும் உதவி கோரியிருந்தனர் அதற்கு அமைவாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சுரேந்திரா சுஜி குடும்பம் வழங்கிய ரூபா 20,000 வழங்கி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகள் வடமராட்சி பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்றனர் அவர்களில் ஒரு பிள்ளைக்கு கல்வி செலவுக்கு மாதாந்தம் ரூபா 40,00 வழங்கி வைக்கப்படும் மற்றும் வடமராட்சி புலோலி பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் ரூபா 40,00 வழங்கி வைக்கப்படும் இன்று 09-11-2019 சனிக்கிழமை காலை 11-00 மணியளவில் கனடா நாட்டில் வாழ்ந்துவரும் இ -பார்த்தீபன் இருவரின் கல்வி செலவுக்கு மாதாந்தம் நிதி வழங்குவதாக உறுதி வழங்கியிருந்தார் அதற்கு அமைவாக முதல் கட்டமாக இருவருக்கும் தலா 40,00 வழங்கி வைக்கப்பட்டது

அமரா் சி – சரஸ்வதி அவர்களின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 92 பேருக்கு உடுபுடவைகளும் விசேட மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது ரூபா 12,1000பெறுமதியான உடுபுடவை மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது குறித்த நிதியை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் மைக்கல் நேசக்கர அனுசரணையாளரும் மூத்த மகனுமான திரு – சி -ராதாகிருஸ்ணன் வழங்கி வைத்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்