Thu. May 16th, 2024

மூன்று உணவகங்களுக்கு சீல்

பூநகரியில் எலி எச்சம் மற்றும் ஈக்களினால் மாசுபடும் வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று உணவகங்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
பூநகரி வாடியடிப்பகுதியில் உணவகங்களில் உணவுதயாரிப்பு மற்றும் கையாளுகையின் போது எலி எச்சம் மற்றும் ஈக்களினால் மாசுபடுதலுக்கு உட்பட்ட நிலையில் மூன்று  உணவகங்களுக்கு கிளிநொச்சி நீதிமன்றின் உத்தரவுக்கமைய பொது சுகாதாரப்பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டது.
பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் பூநகரிப்பகுதி உணவகங்கள் பொதுசுகாதார பரிசோதகர்களால் குழுவாக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு உணவகத்தில் எலி எச்சத்துடன் சேர்த்து றோல் தயார்க்கப்படுவதும் வேறு இரு உணவகங்களில் அதிகளவான ஈக்கள் மொய்த்தபடி உணவுப்பண்டங்கள் காணப்பட்டதோடு ஊழியர்கள் மருத்துவதகுதிச் சான்றிதழ் இன்றியும் தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் இன்றியும், முகச்சவரம் செய்யாமலும் உணவுகையாளுவது கண்டுபிடிக்கப்பட்டதோடு அடிப்படைக் கழிவுக்கட்டுப்பாடுகளும் மோசமாகக் காணப்பட்டன.
இதுதொடர்பாக பூநகரிப் பொதுசுகாதார பரிசோதகர் சிந்துஜனால் எட்டு வழக்குகள் செவ்வாய்கிழமையன்று கிளிநொச்சி நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டது. இதில் இனங்காணப்பட்ட குற்றங்களுக்காக 95,000(தொண்நூற்ரைந்தாயிரம்) தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி பொது சுகாதார பரிசோதகர்களால் சீல்வைத்து மூடப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்