Fri. May 17th, 2024

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின், 11ம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின், 11ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையநாள் (18/5) காலை 10.30 மணி முதல் முள்ளிவாய்க்கால்

நினைவுத் திடலில் மிகவும் உணர்வுபூரவமாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சரியாக காலை 10.30 மணியளவில், உயிர்நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், தொடர்ந்து பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

இறுதி யுத்தத்தின்போது இரு பிள்ளைகளையும், கணவனையும் இளந்த தாயாரான இலட்சுமணன் பரமேஸ்வரி அவர்கள் பிரதான பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றிவைக்கப்பட்டதையடுத்து, இவ்வருடத்திற்கான முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

அதனையடுத்து இறுதி யுத்தத்தில் இன்னுயிரை ஈர்ந்த உறவுகளுக்கு, சமூக இடைவெளி பேணப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இறுதி யுத்தத்தின்போது இன்னுயிரை ஈந்தவர்களின் உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மதகுருக்கள் தமிழ் பற்றாளர்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போதுள்ள கொரோனா தொற்று அபாய நிலையினைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளி பேணப்பட்டு, கைகள் சுத்தப்படுத்தப்பட்டு தற்காலத்திற்கு ஏற்றவகையில் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பரந்தன் வீதியில் நெத்தலியாற்றில் வைத்து பலரையும் இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்