Fri. May 17th, 2024

மீண்டும் விடுதலை புலிகளின் தடையை நீடித்த ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலை மீளவும் புதுப்பித்துள்ளது, இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கியதாக அமைக்கிறது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறார்கள்

“பட்டியலில் உள்ள நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கள் நிதி மற்றும் பிற நிதி சொத்துக்களை என்பன முடக்கப்படக்கூடியவை.மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு நிதி மற்றும் பொருளாதார வளங்களை வழங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது, இந்த அறிக்கை தெரிவித்துள்ளது

11 செப்டம்பர் 2001 பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த பட்டியலை முதன்முதலில் ஐரோப்பிய ஒன்றியம் அமல்படுத்தியது

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட மற்றும் கடைசியாக ஜனவரி மாதம் புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியலில், பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பெருவின் மாவோயிஸ்டுகளால் ஈர்க்கப்பட்ட கிளர்ச்சிக் குழு ஷைனிங் பாத் போன்ற 15 தனிநபர்களும் 21 அமைப்புகளும் அடங்கும்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் 2003 முதல் பட்டியலிடப்பட்டுள்ளது, 2001 முதல் அதன் இராணுவப் பிரிவும் , 2006 இல் விடுதலை புலிகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்