Fri. May 17th, 2024

மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்

14.01.2020இன்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய அங்கயன் ராமநாதன் அவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். நச்சுப்பொருட்களை எரிக்கும் இயந்திரம்,  அருகில் இருக்கும் பொது மக்களை பாதிக்கின்றது  என்ற  முறைப்பாட்டை அடுத்து விசாரணையை மேற்கொள்ள திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். பொது மக்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்  என அங்கு நின்ற மக்கள் குறைபட்டு கொண்டார்கள்.  தங்களுக்கு நீதியான தீர்வு மேற்கொண்டு தருமாறு பாராளமன்ற உறுப்பினரை கேட்டுக்கொண்டார்கள். கழிவுநீர் அருகில் உள்ள வீட்டு கிணறுகளுக்கு செல்வதினால் பாவிக்க முடியாமல் சில கிணறுகளை மூடி வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள். சரியான முறையில் தீர்வு கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.  கழிவுகள் உரைபைகளில் வெளியில் கட்டி போடப்பட்டு இருப்பதையும் அதில் துர்நாற்றம் விசுவதையும் காணக்கூடியதாக இருந்தது.  காலை 9 மணியிலிருந்து 12 மணி வரையும் பொதுமக்களுடனும் நிர்வாகத்துடன் அயலில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்லதொரு முடிவை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டது. வைத்தியசாலையில் கொட்டப்படும் கழிவுகள்அகற்றுவதற்கு வாகனம் இல்லாத காரணத்தினால் வைத்தியசாலை வட்டாரம் சிரமங்களை எதிர்கொள்வதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் எடுத்து கூறினர். இந்த நிலையில் மக்களுக்கு  இடைஞ்சல் இல்லாமல் கழிவகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு பாராளுமன்ற உறுப்பினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்த அங்கஜன், வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் உடனடியாக புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் 3 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் நல்ல ஒரு முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்