Fri. May 17th, 2024

மின்சார தேவையை பூர்த்தி செய்ய ஜனாதிபதி மின் மற்றும் எரிசக்தி அமைச்சக அதிகாரிகளுடன் சந்திப்பு

மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தகவல் தெரிவிக்குமாரும் முறையான கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முந்தைய அரசாங்கம் மின் துறை தொடர்பான வெளிநாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தாலும், அந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை அரசாங்ககளுக்குகிடையில் இல்லாமல் தனியார் நிறுவனங்களுடன் கையெழுத்திடபட்டிருக்கின்றன .

ஜனாதிபதி செயலகத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் இது தெரியவந்துள்ளது.

ஒப்பந்தங்களை அமல்படுத்தும்போது இது தொடர்பாக முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரா, இராஜங்க அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் பி.பி.ஜெயசுந்தேரா மற்றும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்