Sun. May 19th, 2024

மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யகோரி வழக்கு

பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23ஆம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இலங்கை குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106 ஆம் பிரிவின் கீழ் பொது தொல்லையின் இந்த விண்ணப்பம் பருத்தித்துறை வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய மூன்று பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.  பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பம் இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் காயத்ரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனு அழைக்கப்பட்டபோது சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் சந்திரசேகரன் உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் போலீசாரின் விண்ணப்பத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்பட உள்ள நிலையில் பொலிசார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர்.  அதனால் மேல் நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முடிவு வைத்துக்கொண்டு இந்த விண்ணப்பத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணிகள் வாதாடினர். அதனால் குறித்த வழக்கு எதிர்வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதவான் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்